எரிபொருள் விலையில் மாற்றம்! புதிய விலைகள் வெளியாகின - Global Tamil Voice உலக தமிழ் குரல்

எரிபொருள் விலையில் மாற்றம்! புதிய விலைகள் வெளியாகின



இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி, அதன் விலை தொடர்ந்தும் 475 ரூபாவாகவே காணப்படும்.

இதேவேளை, சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 478 ரூபாவாக இருந்த சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 528 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அத்துடன், டீசல் லீற்றர் ஒன்றின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 382 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 392 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி, மண்ணெண்ணெய் தொடர்ந்தும் 285 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய எரிபொருள் விலைகள்

  • ஒக்டேன் 92 பெற்றோல் – ரூ. 414

  • ஒக்டேன் 95 பெற்றோல் – ரூ. 475

  • டீசல் – ரூ. 392

  • சூப்பர் டீசல் – ரூ. 528

  • மண்ணெண்ணெய் – ரூ. 285

About Lanka Theepam