பொலன்னறுவையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை - Global Tamil Voice உலக தமிழ் குரல்

பொலன்னறுவையில் மர்மமான முறையில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தை

 


பொலன்னறுவை, கல்தம்பராவ – நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் 31 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (31) காலை மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் ஈஸ்வரகே தொன் தில்ஷான் மதுஷங்க என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் மனைவி பொலிஸாரிடம் வழங்கிய தகவலின்படி, நேற்று (30) பிற்பகல் அவரது கணவர் நண்பர்களுடன் மதுபானம் அருந்திய பின்னர் வீட்டுக்கு அருகில் வந்துள்ளார்.

இதன்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக மனைவி தெரிவித்துள்ளார்.

எனினும், இரவு முழுவதும் அவர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள பிரதான வீதியில் காயங்களுடன் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை மனைவி அவதானித்துள்ளார்.

அருகில் சென்று பார்த்தபோது அது தனது கணவர் என அடையாளம் காணப்பட்டதுடன், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மரணம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, மதுபானம் அருந்திய பின்னர் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வீதியில் வீழ்ந்ததன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

பொலன்னறுவை பொலிஸாரின் பல குழுக்கள் இணைந்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

About Lanka Theepam