எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதில் பெண் உயிரிழப்பு – ஒருவர் கைது - Global Tamil Voice உலக தமிழ் குரல்

எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதில் பெண் உயிரிழப்பு – ஒருவர் கைது

 



காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலன்வத்தை பகுதியில் எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதில் காயமடைந்த 57 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (30) மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பெண், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெனியாய பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மவுண்ட்ஹோல்வத்தை, அம்பலங்கொட பகுதியில் உள்ள வீடொன்றில் மற்றொரு பெண் மற்றும் இரு ஆண்களுடன் இணைந்து குறித்த பெண் பணிபுரிந்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அங்கு எயார் ரஃபிள் துப்பாக்கி இயங்கியதன் காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அங்கு பணிபுரிந்த மற்றொரு பெண்ணை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About Lanka Theepam