33 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தபோது, இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானியை சக விமானி ஒருவர் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் டுபாயை சுற்றிப்பார்த்த பின்னர், தாயகம் திரும்புவதற்காக டுபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து டெல் அவிவில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட விமானத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய விமான சேவையில் இயக்கப்பட்ட போயிங் ரக விமானத்தில் 27 குழந்தைகள் உட்பட 174 இஸ்ரேலிய பயணிகள் பயணித்ததுடன், விமானப் பணியாளர்களையும் சேர்த்து 180-க்கும் மேற்பட்டோர் விமானத்தில் இருந்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த தலைமை விமானி ஸ்மித் மச்சர் மற்றும் ஓமான் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஆகியோர் விமானத்தை இயக்கியுள்ளனர்.
விமானம் டுபாயில் இருந்து புறப்பட்டு சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பின்னர் சவூதி அரேபிய வான்பரப்பைக் கடந்து ஜோர்டான் வான்பரப்பில் சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சக விமானி தலைமை விமானியை கத்தியால் தாக்கியதுடன், விமானத்தை தகர்க்க முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்கள் மற்றும் விசாரணைத் தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.