P.B. ஜயசுந்தரவிடம் 4 மணி நேரம் வாக்குமூலம் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

P.B. ஜயசுந்தரவிடம் 4 மணி நேரம் வாக்குமூலம்

 



முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம் இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் நான்கு மணிநேரம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எயார்பஸ் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, குறித்த எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Lanka Theepam