நிறுத்தி வைக்கப்பட்ட பாரஊர்தி மீது கார் மோதி விபத்து... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நிறுத்தி வைக்கப்பட்ட பாரஊர்தி மீது கார் மோதி விபத்து...

நுகேகொடை – தெல்கந்த பகுதியில் நேற்றிரவு  லொறியொன்றுடன் காரொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் முதலில் கார் தீப்பிடித்ததுடன், பின்னர் லொறியும் தீக்கிரையாகியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 நேற்றிரவு 10.50 மணியளவில் தெல்கந்த வீதிக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியுடன் காரொன்று மோதியுள்ளது. சம்பவத்தில் இரண்டு வாகனங்களும் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர். காரிலிருந்த இருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




About UPDATE