நபர் ஒருவரின் உடலை இழுத்துச் சென்ற முதலை - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நபர் ஒருவரின் உடலை இழுத்துச் சென்ற முதலை

தியவன்னா ஓயாவில் நபர் ஒருவரின் உடலை முதலை ஒன்று இழுத்துச் செல்லும் காட்சி கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டையின் கிம்முலாவல பகுதியில் நேற்று (09) மாலை 5.45 மணிளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 குறித்த முதலை உடலை பாலத்தை நோக்கி இழுத்து வந்ததாகவும் பின்னர் பாலத்தின் அடியில் உடல் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் இந்தக் காட்சியை பதிவு செய்த பதிவு செய்த இளைஞன் தெரிவித்துள்ளார். கிம்புலாஎல பாலத்தை அண்மித்து முதலை கைவிட்டுச் சென்ற உடல், கடற்படை வீரர்களின் உதவியுடன் கரைக்கு கொண்டுவரப்பட்டது.
 இந்த சம்பவம் தொடர்பில் மிரிஹானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





About UPDATE