தொடர்ந்து அவதிப்பட்டு வந்த அந்த பெண்ணின் ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள வைரஸ் ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு சிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் கேரளாவில் இந்த தொற்று முதன் முதலாக கண்டறியப்பட்டு இருக்கிறது.
இதை மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் நேற்று தெரிவித்தார்.
கேரளாவில் கொரோனா ஏற்படுத்திய பாதிப்புகளே இன்னும் மறையாமல் இருக்கும் நிலையில், சிகா வைரசும் தலைகாட்டி இருப்பது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ் ஏடிஸ் கொசுக்களால் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
