மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம்கொலனி பகுதியில் தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போது மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

 இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. 29 வயதுயுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது உடலம் புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.



About UPDATE