மேலும் 43 கொரோனா மரணங்கள்.................... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மேலும் 43 கொரோனா மரணங்கள்....................

நாட்டில் மேலும் 43 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (08) உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டோரில் 14 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 29 பேரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

 அத்துடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரில் 30 ஆண்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, இன்று இதுவரையான காலப்பகுதியில் 964 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

 இதற்கமைய, நாட்டில் இதுவரை 2,70,910 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 2,41,035 பேர் குணமடைந்துள்ளதுடன், 25,520 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



About UPDATE