அமெரிக்காவை சீண்டும் TIK TOK நிறுவனம்.....! - Global Tamil Voice உலக தமிழ் குரல்

அமெரிக்காவை சீண்டும் TIK TOK நிறுவனம்.....!


அமெரிக்க நிறுவனங்கள் சீன செயலியான டிக் டொக் உடனான தொடர்புகளை எதிர்வரும் 45 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளமையினைத் தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பபோவதாக டிக் டொக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க அதிபரின் குறித்த உத்தரவானது அதிர்ச்சியளிப்பதாக குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும் அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரில் மிகப் பாரிய அளவில் பாவனையாளர்களை கொண்ட மற்றொரு செயலியான We Chat செயலிக்கும் அதே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள WeChat செயலி நிறுவனத்தின் உரிமையாளர் ரென்சென்ட், “நாம் குறித்த உத்தரவு தொடர்பாக முழுமையாக புரிந்துகொள்ளும் நோக்குடன் பரிசீலித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

About Thentral News Network