தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளர்கள் 10 பேர் மரணம்..... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

தீ விபத்தில் சிக்கி கொரோனா நோயாளர்கள் 10 பேர் மரணம்.....


ஆந்திராவின் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஹோட்டலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சொகுசு ஹோட்டலொன்று கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டு, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 மாடி கொண்ட அந்த சொகுசு ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் ஹோட்டலில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் சொகுசு ஹோட்டலில் 3ஆவது மாடியில் கொரோனா தொற்று சிகிச்சையிலிருந்த 10 நோயாளிகள் மாடியிலிருந்து குதித்து உயிர் தப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது...

About Thentral News Network