24 மணி்த்தியாலத்தில் 1000 உயிரிழப்புக்களை தொட்டது கொரோனா தொற்று..... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

24 மணி்த்தியாலத்தில் 1000 உயிரிழப்புக்களை தொட்டது கொரோனா தொற்று.....





இந்தியாவில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆயிரத்தைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் இந்த வைரஸ் காரணமாக 950இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 84 ஆக பதிவாகியுள்ளது.

அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் 63 ஆயிரத்து 986 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25 இலட்சத்து 89 ஆயிரத்து 208 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரையில் 18 இலட்சத்து 60 ஆயிரத்து 672 பேர் மீண்டுள்ளனர். மேலும் 6 இலட்சத்து 78 ஆயிரத்து 452இற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் 8 ஆயிரத்து 944 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


About Thentral News Network