கணவனை கடித்த பாம்பு மனைவியை கடித்த கணவன்!!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கணவனை கடித்த பாம்பு மனைவியை கடித்த கணவன்!!!

பீகாரில் மனைவி தன்னுடன் சாக வேண்டும் என்ற நோக்கில் தன்னை பாம்பு கடித்தவுடன், தனது மனைவியை கடித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் பிர்ஷங்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஷங்கர் ராய் என்பவரை விஷப்பாம்பு ஒன்று கொத்தியுள்ளது. விஷப்பாம்பு கொத்தியதால் தான் பிழைக்கமாட்டேன் என உணர்ந்த ஷங்கர் ராய் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு சென்றுள்ளார்.
தனது இறுதி ஆசைப்படி, தான் இல்லாத இந்த உலகத்தில் தனது மனைவி வாழ்வதை விரும்பாத ஷங்கர் ராய், மனைவி அமிரி தேவியிடம் ஓடிச்சென்று, “நானில்லாத உலகில் நீ எப்படி வாழ்வாய்?” என்று கேட்டதுடன், “இருவரும் ஒன்றாக சாவோம்!” என்றுக் கூறி மனைவியின் மணிக்கட்டில் தன்னால் முடிந்தவரை வலுவாக கடித்துள்ளார்.
இதனால், இருவரும் சுயநினைவை இழந்துள்ளனர், இதனைத் தொடர்ந்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஷங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அமிரி தேவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

About UK TAMIL NEWS