இரண்டு மகள்களுடன் சடலமாக தூக்கில் தொங்கிய தந்தை: தாய் மாயம்! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

இரண்டு மகள்களுடன் சடலமாக தூக்கில் தொங்கிய தந்தை: தாய் மாயம்!

தொழிலாளி ஒருவர் தனது 2 மகள்களுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் மாயமான அவர் மனைவியை பொலிசார் தேடி வருகிறார்கள்.
சென்னையில் உள்ள மணலியை சேர்ந்தவர் சங்கர் (38) அனல் மின் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர் மனைவி ஆஷா (30) தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு கவிதாலயா (13), காவியபிரியா (8) என இரு மகள்கள் உள்ளனர்.
சங்கர் புதிதாக வீடு கட்டியுள்ள நிலையில், குடும்பம் நடத்த போதிய பணம் இல்லாததால் பலரிடம் வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்கியுள்ளார்.
அதே போல ஆஷாவும் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார்.
பணப்பிரச்சனையால் சங்கர் மற்றும் ஆஷாவுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஆஷாவை வேலைக்கு போக வேண்டாம் என சங்கர் தடுத்துள்ளார். ஆனால் அதையும் மீறி அவர் வேலைக்கு சென்றுள்ளார்.
பின்னர், வேலைக்கு சென்ற ஆஷா மாலையில் வீடு திரும்பாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் சங்கரிடம் பணம் கேட்டு நெருக்கடி தந்துள்ளனர்.
பின்னர், மனைவியின் செயல் குறித்து சங்கர், அஷாவின் தம்பி சுபாஷிடம் போனில் பேசியுள்ளார்.
வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆஷா இடையில் வீட்டுக்கு வந்து திருமண விசே‌ஷத்துக்கு செல்வது போல பட்டுப்புடவை, நகை அணிந்து கொண்டு சென்றதாக சுபாஷ், சங்கரிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று காலை சுபாஷ், சங்கரை செல்போனில் தொடர்பு கொண்ட போது அவர் எடுக்காததால் சந்தேகமடைந்த சுபாஷ் அவர் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
வீடு பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக சுபாஷ் பார்த்த போது சங்கர், கவிதாலயா, காவியபிரியா ஆகியோர் தூக்கில் தொங்கி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் மூன்று பேரின் சடலத்தையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் சங்கர், தன் மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் கடன் தொல்லையா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
மேலும், மாயமாகியுள்ள ஆஷாவையும் தேடி வருகிறார்கள்.

About UK TAMIL NEWS