தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரை பயன்படுத்தி பணம் மற்றும் பெண்கள் பரிமாற்றம் ஆட்கடத்தல்கள் மோசடி கும்பல் ஒன்று இயங்கி வருவதாக தமிழக உளவுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து மேற்கொண்ட அதிரடியான சோதனையின் போது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த திருகோணமலை மாவட்டம், மூதூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் இலக்கியன் என்று அறியப்பட்ட
1.) புண்ணியமூர்த்தி கிருபபாகரன்,,
2).மட்டக்களப்பு மாவட்டம், வந்தாறு மூலையைச் சேர்ந்த யோகராசா தவநாதன், என்பவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கைது
செய்யப்பட்ட நபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தபோது சட்டவிரோதமான முறையில்
பயன்படுத்தப்பட்ட சில பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன்
பல முக்கியமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதனைத்
தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையின் போது பல திருக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. இதன்
அடிப்படையில் பல அரசியல் தலைவர்களும், மேற்குலக
நாடுகளில் வசித்து வரும் ஈழத் தமிழர்களும் தொடர்பு பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள்
தெரிவிக்கின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும், துவாரகா, மதிவதனி தொடர்பாகவும் பல சர்ச்சை கருத்துக்கள் தமிழக ஊடகங்களில் வெளிவந்ததும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்கு மூளையாக செயல்பட்ட இந்தச் சந்தேக நபர்கள் தாங்கள் விடுதலை புலிகள் என அடையாளம் காட்டி தமிழக அரசியல் தலைவர்களை நம்ப வைத்து பண மோசடியிலும், ஆட் கடத்தல் போன்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது. போலி துவாரகா என்ற விடயத்தை பையாண்டு புலம்பெயர் தேசங்களில் பண மோசடிகளில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து பெருந்தொகையான பணங்களும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இதற்கு மூளையாக
செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் செல்வரத்தினம்,
புவனேந்திரன் என்ற சிறி. குகன், சுரேஷ், உருத்திரா,
முகுந்தன் என்ற பல பெயர்களால் பலராலும் அறியப்பட்ட முக்கிய குற்றவாளி அண்மையில் ஒரு
பெண்ணுடன் காரில் சென்று கொண்டிருந்த போது போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம்
நடத்திய விசாரணையில் மேலதிகமாக பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளதாக எமக்கு
கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட நபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஜெர்மனியில்
குடியுரிமை பெற்று வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சாந்தி காந்தன் 2.) அஜந்தா கொழும்பு 3),பவித்ரா,
தமிழ்நாடு, 4,) மலேசியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணும், இலங்கை
சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், தமிழ்நாட்டில்
வசிக்கும் சுபாஸ்கரன் விஜி என்ற ஈழத் தமிழ் பெண்ணும் பிரான்சில் வசிக்கும் ஈழத்
தமிழரான குழந்தை என்பவரும் வேறு சிலரும் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு தேடப்பட்டு
வருகிறார்கள். ஒரு சில தினங்களுக்கு முன்னர் தேடப்பட்டு வந்த 55 வயது
மதிக்கத்தக்க பவித்ரா என்ற பெண் பல்லாவரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதும்
தெரியவந்துள்ளது.
தமிழக அரசியல் பிரமுகர்கள் இவர்களுடன் தொடர்பு
பட்டிருப்பதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது அதற்கான புகைப்பட ஆதாரங்களும் காவல்துறையினால்
கைப்பற்றப்பட்டுள்ளது. உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன், பழ
நெடுமாறன் ஆகியோர் இவர்களுடன் தொடர்பாட்டிருப்பதாக எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்கள்
மூலம் உறுதிப்படுத்துகின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும், மகள்
துவாரகா தொடர்பாகவும் மேற்கொண்டப்பட்ட பிரச்சாரத்தின் முக்கிய நபர்களாக
கருதப்படும் இவர்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் ஈழத்
தமிழ் ஆதரவாளர்களை இலக்கு வைத்து தமக்கான பாதுகாப்பை தக்கவைத்துக் கொண்டதும் தெரிய
வந்துள்ளது. அதுமட்டுமின்றி ஆள் கடத்தல் வேலைகளிலும் ஈடுபட்டுள்ளமை
குறித்து எமது செய்தி பிரிவுக்கு பல
ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது.
தகவல்களின்படி இலங்கையின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, வன்னி
மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் வாழும் ஏழை மக்களை குறிவைத்து வெளிநாட்டுக்கு
அனுப்புவதாக கூறி நபருக்கு 10 லட்சம் ரூபா வரையிலான பணங்களைப் பெற்று இந்தியா, மலேசியா
போன்ற நாடுகளுக்கு அனழத்துவரப்பட்டு ஏமாற்றப்பட்டதும், பாலியல்
தொழில்களுக்கு உட்படுத்தப்பட்டதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சுரேஷ் என்ற சிறி என்பவருடன் கைது
செய்யப்பட்ட யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த விசாரணை செய்த போது சுரேஷ் என்ற சிறி, நாதன்
என்ற நவநாதன், இலக்கியன் போன்றவர்கள் பெண்களை பாலியல் தொழிலுக்கு
உட்படுத்தியமை தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட பெண் தற்பொழுது நீதிமன்ற பிணையில் விடுதலை
செய்யப்பட்டு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இது
தொடர்பாக சிறி என்ற சுரேஷ் கைது செய்யப்படும் போது வாடகை வாகன சாரதியும் கைது
செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில் குறித்த பெண்ணும், சுரேஷ்
என்ற சிறியும் கணவன் மனைவியாக செயல்பட்டதும் தெரியவந்துள்ளது. இலங்கையில்
இருந்து சுமார் 280 நபர்களிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக
திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன. மேலும்
இரண்டு பெண்களை காணவில்லை என்றும் அவர்களுடைய தொடர்பு ஏதும் கிடைக்கவில்லை என்றும்
அவர்களுடைய பெற்றோர் தேடுதலில்
ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதையும் திருகோணமலையில் வசிக்கும் சம்பந்தப்பட்ட
நபர்களின் நெருங்கிய வட்டாரங்களிலிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரிவிக்கின்றது. சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பாக தெரிந்தவர்கள்
அறிந்தவர்கள் எமது இணையதளத்தின் கருத்துப் பகுதியில் தொடர்பு கொண்டு தகவல்களை
வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது மேலும் இது தொடர்பான செய்திகள்
உடனுக்குடன் உங்களுக்கு வந்து சேரும் என்பதை எமது நேயர்களுக்கு தெரிவித்துக்
கொள்கின்றோம்