ஹல்பாதோட்ட துப்பாக்கிச் சூடு வழக்கு: ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது - Global Tamil Voice உலக தமிழ் குரல்

ஹல்பாதோட்ட துப்பாக்கிச் சூடு வழக்கு: ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது

 


பத்தேகம, ஹல்பாதோட்ட பகுதியில் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர்கள் மீது காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று (29) இரவு ஹல்பாதோட்ட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 6 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஹவத்த பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பத்தேகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தேகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

About Lanka Theepam