மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 8.75% ஆக தொடர்ந்தும் பேண முடிவு - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தை 8.75% ஆக தொடர்ந்தும் பேண முடிவு

 


இலங்கை மத்திய வங்கி தனது நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஓரிரவு கொள்கை வட்டி வீதமானது (OPR) 8.75 சதவீதமாக மாற்றமின்றி தொடரும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை நேற்று (29) கூடிய நிலையில், உள்நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சர்வதேச பொருளாதாரச் சூழல்
உள்ளிட்ட பல்வேறு காரணிகளை மதிப்பீடு செய்து இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் தொடரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கி கடந்த மே மாதம் ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்து 8.75 சதவீதமாக நிர்ணயித்திருந்தது. 

தற்போதைய பொருளாதார நிலைமைகள் மற்றும் பணவீக்கப் போக்குகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

About Lanka Theepam