ஜப்பானின் COVAX திட்டம் மூலம் ஒரு தொகை AstraZeneca தடுப்பூசிகள் இன்று மாலை நாட்டை வந்தடைந்தன.
இதற்கமைய, 7,28,460 AstraZeneca தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு கிடைத்துள்ளன.
இந்த நிலையில், இதேயளவு தடுப்பூசிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் நாட்டிற்கு கிடைக்கவுள்ளது.
இந்த தடுப்பூசிகள், முதலாவது தடுப்பூசியாக AstraZeneca தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், மிகுதி தடுப்பூசிகள் கேகாலை மாவட்டத்திற்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
