இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது..

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம், எங்களது பூர்வீகம் தமிழ்நாடு தான், எங்களது முன்னோர்கள் வணிக ரீதியாக இலங்கைக்கு சென்றார்கள், தற்போது அங்கு உள்ள அரசியல் சூழலின் காரணமாக மீண்டும் அகதிகளாக நாங்கள் தமிழகம் திரும்பி விட்டோம் .
 எனவே எங்களுக்கு குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இலங்கை அகதிகள் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில், இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வந்த அகதிகள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.



About UPDATE