வவுனியா பொது சந்தையில் 112 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை........................ - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வவுனியா பொது சந்தையில் 112 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை........................

வவுனியா பொது சந்தையில் 112 பேருக்குச் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

 வவுனியா பொது சந்தையில் கடந்த வாரம் சிலருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து அப்பகுதியில் சில வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் கோவிட் பரவலைத் தடுக்கும் வகையில் வவுனியா பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதில் கடமையாற்றுவோர் என 112 பேருக்குச் சுகாதாரப் பிரிவினரால் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், குறித்த பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.



About UPDATE