இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊகடப் பேச்சாளர் கிங்ஸ்லி ரட்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இரசாயன உர வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக சில ஊடகங்களில் வெளியான செய்தி அடிப்படையற்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறு அனுமதி வழங்கப்படப் போவதில்லை எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி தெரிவித்துள்ளார்.
