இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூகம் மத்தியில் கொடிய மாறுபாடு பரவியுள்ளதா என்பதை அறிய சுகாதார அமைச்சகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் பி.சி.ஆர் சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையை சுகாதார அமைச்சு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் இது குறித்த மரபணு வரிசைமுறைகளை மேற்கொண்டு வருகிறது, விரைவில் முடிவுகள் வெளியிடப்படும்.
நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி இருக்கலாம்: சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர்
டெல்டா மாறுபாடு நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவி இருக்கலாம் என்று சுகாதார சேவைகள் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனினும் பொது சுகாதார பரிசோதகர்களால் கூறப்பட்ட படி நாட்டின் பல பகுதிகளுக்கு பரவியுள்ளது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
