வவுனியா நகர சதோச கிளை இன்று மாலை மூடப்பட்டது. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வவுனியா நகர சதோச கிளை இன்று மாலை மூடப்பட்டது.

கோவிட் பரவலையடுத்து வவுனியா நகர சதோச கிளை இன்று மாலை மூடப்பட்டது. வவுனியா நகரில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் முடிவுகள் சில இன்று மாலை வெளியாகிய நிலையில், வவுனியா நகர சதோச கிளையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 இதனையடுத்து குறித்த ஊழியரை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்க சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவருடன் தொடர்பைப் பேணிய குறித்த சதோச கிளை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சதோச கிளையும் சுகாதாரப் பிரிவினரால் மூடப்பட்டுள்ளது.




About UPDATE