மன்னிப்பு கோரினார் குசல் ஜனித் பெரேரா......... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

மன்னிப்பு கோரினார் குசல் ஜனித் பெரேரா.........

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களிடம் அணித் தலைவர் குசல் ஜனித் பெரேரா மன்னிப்பு கோரியுள்ளார். நாளை (29) ஆரம்பமாகவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடர் குறித்து இணையவழியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மன்னிப்பு கோரினார். சரித் அசலங்க தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 
அதிக புதிய வீரர்களை ஒருநாள் தொடரில் இணைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இருபதுக்கு இருபது தொடரில் தோல்வியடைந்த விதத்தை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெற்றுக்கொண்ட அனுபவத்தின் மூலம், எவ்வாறு சிறப்பாக விளையாடுவது என்றே எதிர்பார்க்கிறோம். வீரர்களும் திறமையை வௌிப்படுத்த வேண்டும். பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க நிலை காணப்படுகிறது. துடுப்பாட்ட வீரர்கள் என்ற வகையில் போட்டியை ஏற்படுத்தக்கூடிய ஓட்ட எண்ணிக்கையைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நாம் தோல்வியடைந்த விதம் தொடர்பில் ரசிகர்கள் கவலையாகவுள்ளதை ஏற்கிறேன். அவ்வாறிருந்தும் எம்மைத் தொடர்புகொண்டு வாழ்த்துகின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.

 அவர்களின் எதிர்பார்ப்பை நாம் ஓரளவு இல்லாமல் செய்துள்ளமையை எண்ணி அணித் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோருகின்றேன். இச் சந்தர்ப்பத்திலுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இவ்வாறான ரசிகர்கள் உள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன் என குசல் ஜனித் பெரேரா தெரிவித்தார். இதேவேளை, 20 க்கு 20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று கொழும்பை வந்தடைந்தது. 




About UPDATE