வாகன விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

வாகன விபத்தில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு....


வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரியில் நேற்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஜய பெரமுன தெரிவித்தனர்.

கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் வயது (16) என்பவரே உயிரிழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை வேக கட்டுப்பாட்டினை இழந்து பாதையை விட்டு விலகி விபத்திற்குள்ளானதால் இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


About Thentral News Network