நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இடம்பெற்ற வாகன விபத்தில் வாழைச்சேனை- வாகனேரி பகுதியில் வாகனேரி சுற்றுலா விடுதியைச் சேர்ந்த நடராஜா தனுஜன் (வயது 16) என்ற சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் ஆலய உற்சவத்தில் கலந்து கொண்டுவிட்டு வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளார். இதன்போது வாகனம் வேக கட்டுப்பாட்டினை இழந்து பாதையை விட்டு விலகி விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது...
