இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில், நேற்று (வியாழக்கிழமை) புதிதாக 68 ஆயிரத்து 507 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் புதிதாக 981 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 29 இலட்சத்தை கடந்துள்ளதுடன், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்துள்ளது.
அத்துடன் 21 இலட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள அதேவேளை 6 இலட்சத்து 91 ஆயிரம் பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
