நடு வீதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர். - Global Tamil Voice உலக தமிழ் குரல்

நடு வீதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர்.

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடு வீதியில் வைத்து சுடப்பட்ட ஊடகவியலாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், இவரது கொலையுடன் தொடர்புபட்டதாக 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
உள்ளுர் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிவரும் விக்ரம் ஜோஷி கடந்த 20 ஆம் திகதி அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரண்டு மகள்களுக்கு முன்பே துப்பாக்கியால்  சுடப்பட்டார். 
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஊடகவியலாளர்  இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் இந்திய ஊடகவியாளர்கள் மத்தியில் கொத்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில், விக்ரம் ஜோஷியின் மருமகளிடம் சிலர் முறையற்ற விதத்தில் சீண்டியமை தொடர்பில், அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இந்த சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.....

About Thentral News Network