எனது மகளை புழல் சிறைக்கு மாற்றுமாறு கடிதம் அனுப்பிய நளினியின் தாயார்.... - Global Tamil Voice உலக தமிழ் குரல்

எனது மகளை புழல் சிறைக்கு மாற்றுமாறு கடிதம் அனுப்பிய நளினியின் தாயார்....

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, நேற்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
சிறையில் சக கைதியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினாலும், பெண் சிறை காவலர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினாலும் துணியால் தனது கழுத்தை நெரித்து தற்கொலைக்கு நளினி முயன்றதாகதெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று கருத்து தெரிவித்துள்ள அவரது வழக்கறிஞர் புகழேந்தி ‘நளினியின் தற்கொலை முயற்சியை விரைவாக சிறை காவலர்கள் தடுத்ததால் எந்த வித அசம்பாவிதமும் இன்றி பத்திரமாக உள்ளார்’ என கூறினார்.
இந்நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ‘நளினியின் கழுத்து பகுதியில் காயம் எதுவும் இல்லை. அவரது உடல் நிலையும் சீராக உள்ளது’ என மருத்துவ சான்று கொடுத்துள்ளார்..
இதேவேளை, நளினியின் தாயார் பத்மா ‘எனது மகளை புழல் சிறைக்கு மாற்றுமாறு கேட்டு கொள்கிறேன்’ என தமிழக தலைமை செயலாளருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.....

About Thentral News Network