ட்ரம்ப் டவரில் தீ பற்றி எரிந்தது !!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

ட்ரம்ப் டவரில் தீ பற்றி எரிந்தது !!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிபருக்கு சொந்தமான 58 மாடி கட்டிடம் நியூயோர்க்கில் மேன் காட்டன் மிட்டவுன் பகுதியில் உள்ளது.
இதில் ட்ரம்ப் நிறுவனங்களின் தலைமை அலுவலக கட்டிடம் வர்த்தக நிறுவனங்கள், ட்ரம்பின் சொகுசு மாளிகை, அவரது மகன், மகளின் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன.
இக்கட்டிடம் 664 அடி உயரம்  இக்கட்டிடத்தின் 50ஆவது மாடியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 
இந்த விபத்தில் 67 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு 4 தீயணைப்பு படை வீரர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

About Unknown