150 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து!! - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

150 அடி பள்ளத்தில் பாய்ந்து லொறி விபத்து!!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் அட்டபாகை பிரதேசத்தில் நுவரெலியா பகுதியிலிருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறி ஏற்றிச்சென்ற டிப்பர் ரக லொறி ஒன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.



குறித்த லொறி வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கம்பளை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கமே விபத்துக்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்துள்ளதாகவும், இருவரும் காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறியில் இருந்த மரக்கறி வகைகள் வீணாகியுள்ளதோடு லொறியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Unknown