வாஸுக்கு 5 வருட கடூழிய சிறைதண்டனை - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வாஸுக்கு 5 வருட கடூழிய சிறைதண்டனை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 5 வருட கடூழிய சிறை தண்டனையை விதித்துள்ளது.
வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட போது முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன, பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர உள்ளிட்ட மூன்று அதிகாரிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் குற்றவாளி என நிருபனமான பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர முன்வைத்த முறைப்பாட்டிற்கு அமைய வாஸ் குணவர்தன மேல் 6 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டிருந்தது.
அவற்றுள் மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் அதிகளவான சாட்சிகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்தே கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் கிஹான் குலதுங்க இன்று  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

About Unknown