8 பேரின் மருத்துவம், கல்விக்காக ரூ.2 லட்சம் கருணாநிதி வழங்கினார் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

8 பேரின் மருத்துவம், கல்விக்காக ரூ.2 லட்சம் கருணாநிதி வழங்கினார்

Image result for karunanidhiசென்னை : மருத்துவம், கல்விக்காக தலா ரூ.25 ஆயிரம் வீதம் 8 பேருக்கு ரூ.2 லட்சம் கருணாநிதி வழங்கினார். கருணாநிதி அறக்கட்டளைக்காக, திமுக தலைவர் கருணாநிதி அளித்த ரூ.5 கோடியிலிருந்து கிடைக்கும் வட்டியில் மாதம் தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு மருத்துவம், கல்வி உதவித் தொகையாக கடந்த 2005 நவம்பர் முதல் வழங்கப்பட்டது. 5 கோடியில், 10-1-2007ல் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடியை கருணாநிதி வழங்கினார். மீதமுள்ள 4 கோடியில் வரும் வட்டியில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை ரூ.4 கோடியே 47 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் கிடைத்த வட்டியில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை கருணாநிதி நேற்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலை அனுப்பப்பட்டது. இந்த தகவலை திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

About Unknown