கொடிய பாம்புகளுடன் நண்பராகும் இலங்கை இளைஞர் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

கொடிய பாம்புகளுடன் நண்பராகும் இலங்கை இளைஞர்

பாம்புகளை பார்த்தவுடன் நண்பராகும் இலங்கை இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் பாம்புகள் குறித்து மக்கள் மத்தியில் சாதகமான நிலைப்பாடுகள் எதுவும் இல்லை.
பாம்புகள் அச்சுறுத்தல் கொண்டவை என்ற கோணத்திலேயே பார்க்கப்படுகிறது. பாம்புகளை பார்த்தவுடன் அடித்து கொலை செய்யும் மக்களே அதிகமாக உள்ளனர்.
பாம்புகளை பிடித்து மீண்டும் காட்டில் விடும் காட்சிகளை நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தாலும், அவ்வாறு நடந்து கொள்பவர்கள் இலங்கையில் இல்லை.
எனினும் இலங்கையில் வாழும் இளைஞர் ஒருவர் பாம்புகளை கண்டவுடன் அவைகளுடன் நட்புறவு கொண்டாடுவதாக தெரிய வருகிறது.
கொடிய பாம்புகளுடனும் மிகவும் நட்பாக பழகும் குணாதிசயம் கொண்டவராக காணப்படுகிறார். இவர் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் அதிக பிரபல்யம் அடைந்துள்ளார்.
பிரதிப் சஞ்சய அத்தபத்து என்ற என்ற இளைஞரே பாம்புகளுடன் நட்புறவு கொண்டுள்ளார். அவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் வாழ்வதாக தெரிய வருகிறது

About UK TAMIL NEWS