300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது பேருந்து - 30 பேர் பலி - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது பேருந்து - 30 பேர் பலி

இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவின் இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் சிம்லா அருகே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கின்னார் பகுதியில் இருந்து சோலன் பகுதியை நோக்கி நேற்று காலை சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ராம்புர் அருகே 300 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
சாரதி வேக கட்டுப்பாட்டை இழந்தமையின் காரணமாக பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில் குறித்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

About UK TAMIL NEWS