வவுனியா அன்பகத்திலிருந்து சிறுமி சடலமாக மீட்பு! ஆசிரியர் திட்டியதால் தற்கொலை - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வவுனியா அன்பகத்திலிருந்து சிறுமி சடலமாக மீட்பு! ஆசிரியர் திட்டியதால் தற்கொலை

வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள அன்பகம் ஒன்றிலிருந்து இன்று (29.06) மாலை4.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள அன்பகம் ஒன்றில் தாய் மற்றும் தந்தையினை இழந்து 11வயதுடைய சிறுமியொருவர் அடைக்கலம் புகுந்து வசித்து வந்துள்ளார்.
குறித்த சிறுமி இன்று (29.06) காலை பாடசாலைக்கு சென்று விட்டு மதியம் இல்லத்திற்கு திரும்பிய சிறுமி மாலை 4.30 மணியளவில் அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக குறித்த சிறுமியின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
11வயதுடைய சிறுமி தூக்கில் தொங்குவதற்கான காரணம் என்ன?

About UK TAMIL NEWS