தமிழர்களைக் கடத்திய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரிக்குப் பிணை - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

தமிழர்களைக் கடத்திய இலங்கை கடற்படை புலனாய்வு அதிகாரிக்குப் பிணை

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில், 2009ஆம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சிறிலங்கா கடற்படைப் புலனாய்வு அதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெலிசற கடற்படை முகாமில் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய லெப்.கொமாண்டர் தம்மிக அனில் மாபாவை, கொழும்பு பிரதம நீதிவான் நேற்று பிணையில் செல்ல அனுமதித்தார்.
முன்னதாக, சந்தேக நபர் தாக்கல் செய்த மனுவை ஏற்று, கொழும்பு மேல் நீதிமன்றம், அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்தே நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றினால் லெப்.கொமாண்டர் அனில் மாபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

About UK TAMIL NEWS