இலங்கையில் ஏற்பட்ட சோகம்; தந்தை மகன் உட்பட மூவர் பலி - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட சோகம்; தந்தை மகன் உட்பட மூவர் பலி

ஹூங்கம - லூனாம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தந்தை மகன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்று டிப்பருடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் ஹூங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு கதிர்காமம் பிரதான வீதியில் அமைந்துள்ள லூனாம துடுகெமுனு பாடசாலையின் அருகில் தங்கால்லை நோக்கி பயணித்த டிப்பர் வண்டியொன்றும் கதிர்காமம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று நேருக்கு நேர் மோதி விபக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் சிக்கி முச்சக்கர வண்டியில் பயணித்த இரு நபர்களும், சிறுவர்கள் இருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி விபத்தில் சிக்கி 40 வயதுடைய விதானகே பிரியந்த, 34 பந்தேகமகே ரவீந்திர மற்றும் 19 பஹால விதானகே சந்திக பிரசாத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர் எனவும் இவர்கள் மூவரும் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த இரு சிறுவர்களும் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதியை ஹூங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

About UK TAMIL NEWS