- Global Tamil Voice உலக தமிழ் குரல்


ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் பிரிவில், மூன்றாம் இடத்துக்கான போட்டியில் பங்களாதேஷை 63 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 21 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், தரிந்து ரத்நாயக்க சிறப்பாக துடுப்பெடுத்தாடி 32 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித்தலைவர் சஹான் ஆரச்சிகே 33 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் மெஹதி ஹசன், சைஃப் ஹசன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முதல் மூன்று வீரர்களும் ஓட்டமெதுவும் பெறாமல் ஆட்டமிழந்ததால், 4 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது.

பங்களாதேஷ் அணிக்காக நசும் அஹமட் அதிகபட்சமாக 26 ஓட்டங்களைப் பெற்றார்.

இறுதியில் பங்களாதேஷ் அணி 17.3 ஓவர்களில் 102 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இலங்கை அணி 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தனதாக்கியது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் நுவன் துஷார, தரிந்து ரத்நாயக்க, விஜயகாந் வியாஸ்காந்த் மற்றும் வனுஜ சஹன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

About GTV