இன, மத மோதல்களைத் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த சதித்திட்டம் – கோடீஸ்வரன் எம்.பி. எச்சரிக்கை - Global Tamil Voice உலக தமிழ் குரல்

இன, மத மோதல்களைத் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த சதித்திட்டம் – கோடீஸ்வரன் எம்.பி. எச்சரிக்கை

 


இலங்கையில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதத்தைத் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பல்வேறு சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கு சர்வதேச மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த சில சக்திகள் முயற்சித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.

சுயநல அரசியல்வாதிகள், யூடியூபர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிடுபவர்கள் தங்களது அரசியல் நோக்கங்களுக்காக மக்களைப் பயன்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Facebook, YouTube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தூண்டுதல்களுக்கு மக்கள் பலியாகாமல், தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்றும் கோடீஸ்வரன் எம்.பி. வலியுறுத்தினார்.

இவ்வாறான முயற்சிகளுக்கு மக்கள் விழிப்புடன் இருந்து, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

About GTV