ஷிராந்தி ராஜபக்ஷ கைது ! ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பில் விசாரணை.. - Global Tamil Voice உலக தமிழ் குரல்

ஷிராந்தி ராஜபக்ஷ கைது ! ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பில் விசாரணை..

 



முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிருலப்பனையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

‘சிரிலிய சவிய’ கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

About Lanka Theepam