இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஹட்ச் (HUTCH), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (Sri Lanka Institute of Marketing – SLIM) உடன் இணைந்து, நாட்டின் முக்கியமான நான்கு விருது மற்றும் அங்கீகாரத் தளங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
இந்தக் கூட்டாண்மையின் கீழ், சிறந்த விற்பனை நடைமுறைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரிக்கும் National Sales Awards, டிஜிட்டல் சந்தைப்படுத்தலில் புத்தாக்கத்தை கௌரவிக்கும் SLIM Digi Awards, சந்தைப்படுத்தல், விற்பனை, புத்தாக்கம் மற்றும் நிலையான வர்த்தக நடைமுறைகளில் சிறந்து விளங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை (SMEs) பாராட்டும் SME Development Awards, அத்துடன் உத்திசார் சிந்தனை, சிறப்பான செயற்படுத்தல், குழுப்பணி மற்றும் வர்த்தகப் பெறுபேறுகளை மதிப்பிடும் Effie Awards ஆகிய நான்கு விருது மேடைகளும் இடம்பெறுகின்றன.
இந்தப் பங்குடைமையின் மூலம், வர்த்தக நிறுவனங்கள் தமது வளர்ச்சியை வலுப்படுத்துவதற்கு சிறந்த சந்தைப்படுத்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதுடன், இலங்கையில் வலுவான மற்றும் போட்டித்தன்மை கொண்ட வர்த்தகச் சூழலை உருவாக்குவதற்கும் ஹட்ச் தனது பங்களிப்பை வழங்குகிறது.
இலங்கையின் சந்தைப்படுத்தல் துறையின் முன்னணி தொழில்முறை அமைப்பான SLIM, நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பல்வேறு நிகழ்ச்சிகள், விருது நிகழ்வுகள் மற்றும் தொழில்முறை மேம்பாட்டுத் திட்டங்கள் ஊடாக வர்த்தகத் தலைவர்கள், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிபுணர்கள், தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கிய தீர்மானம் எடுப்பவர்களை ஒருங்கிணைத்து வருகிறது.
SLIM உடனான கூட்டாண்மையின் மூலம், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வரும் தனிநபர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் சாதனைகளை ஹட்ச் ஊக்குவித்து கௌரவிக்கிறது. குறிப்பாக விற்பனை, சந்தைப்படுத்தல், டிஜிட்டல் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்தவும் அங்கீகாரம் பெறவும் இந்த விருது மேடைகள் வாய்ப்பளிக்கின்றன.
உலகின் Fortune 500 நிறுவனங்களில் ஒன்றான CK Hutchison Holdings நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படும் ஹட்ச், பெரிய நிறுவனங்கள் முதல் சிறு தொழில்கள் மற்றும் ஆரம்பநிலை நிறுவனங்கள் வரை பல்வேறு வர்த்தக நிறுவனங்களின் டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் வர்த்தக விரிவாக்கத்துக்கு ஆதரவளிக்கும் நிறுவனத் தீர்வுகளை வழங்கி வருகிறது.
அனைத்து அளவிலான நிறுவனங்களும் எளிதில் அணுகக்கூடியதும் செலவுச் சுமையை கருத்தில் கொண்டதுமான டிஜிட்டல் தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிறுவனங்கள் தமது வளர்ச்சி வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள உதவுவதே ஹட்ச்சின் நோக்கமாகும்.
இது தொடர்பில் SLIM நிறுவனத்தின் நிகழ்வுகள் மற்றும் நிலைத்தன்மை பிரிவின் துணைத்தலைவர் ராஜீவ் டேவிட் தெரிவிக்கையில், “தொலைத்தொடர்பு துறைக்கு அப்பால் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஹட்ச் உடன் இணைந்து செயல்படுவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அறிவு, புத்தாக்கம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகளவில் அணுகுவதன் மூலம் வர்த்தக நிறுவனங்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோரை வலுப்படுத்த வேண்டும் என்ற இரு நிறுவனங்களின் பொதுவான நோக்கத்தை இந்தக் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது,” என்றார்.
ஹட்ச் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஹம்திஹஸன் தெரிவிக்கையில், “இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் தனிநபர்களையும் வர்த்தக நிறுவனங்களையும் வலுப்படுத்துவதன் மூலமே உண்மையான வர்த்தகநாமத் தலைமையை உருவாக்க முடியும் என ஹட்ச் நம்புகிறது. SLIM உடனான எமது கூட்டாண்மையின் ஊடாக, நாட்டின் வர்த்தகச் சூழலுக்கு பங்களித்து வரும் தொழில்முறை நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதுடன், மேலும் பல சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எம்மால் பங்களிக்க முடிகிறது,” என்றார்.
