கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு! - Global Tamil Voice உலக தமிழ் குரல்

கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு: மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

 



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், தம்மை கைது செய்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மனுவில் முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னர் இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தம்மை கைது செய்வதையோ அல்லது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதையோ தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஷ தனது ரிட் மனுவின் மூலம் கோரியிருந்தார்.

எனினும், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Lanka Theepam