விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற 12 வயது சிறுமியின் கனவு நனவானது! - Global Tamil Voice உலக தமிழ் குரல்

விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற 12 வயது சிறுமியின் கனவு நனவானது!


அவுஸ்திரேலியாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட 12 வயதான திரிஷா என்ற சிறுமியின் நீண்ட நாள் கனவை நனவாக்கும் வகையில், Qantas விமான நிறுவனம் அவருக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியுள்ளது.

விமானப் பணிப்பெண்ணாக பணியாற்ற வேண்டும் என்ற தனது கனவை சிறுமி திரிஷா வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதனை நிறைவேற்றும் வகையில் Qantas நிறுவனம் அவருக்காக பிரத்தியேகமாக விமானப் பணிப்பெண் சீருடையைத் தயாரித்து வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, திரிஷாவுக்கு விமானப் பணிப்பெண்ணாக ஒரு நாள் பணியாற்றும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. விமானத்தில் பணிப்பெண் சீருடையில் திரிஷா பணியாற்றியபோது, சக பயணிகள் அவரை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்று பாராட்டினர்.

தனது கனவு நனவான மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட திரிஷா, “வாழ்க்கை ஆச்சரியங்களும் அற்புதங்களும் நிறைந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நோயிலிருந்து மீண்டு வரும் சிறுமியின் ஆசையை நிறைவேற்றும் வகையில் Qantas விமான நிறுவனம் மேற்கொண்ட இந்த மனிதநேய முயற்சி, பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

திரிஷாவின் கனவை நனவாக்கிய இந்த சிறப்பு நிகழ்வு, உடல்நல சவால்களை எதிர்கொண்ட குழந்தைகளுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு அழகான முன்மாதிரியாகவும் அமைந்துள்ளது.

About GTV