20 நாட்களில் ரூ.140 கோடியை கடந்த ‘மண்டாடி’ வசூல் - Global Tamil Voice உலக தமிழ் குரல்

20 நாட்களில் ரூ.140 கோடியை கடந்த ‘மண்டாடி’ வசூல்




சூரி கதாநாயகனாக நடித்துள்ள ‘மண்டாடி’ திரைப்படம் வெளியாகி 20 நாட்களில் உலகளவில் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை எல்ரட் குமார் தயாரித்துள்ளார். இதில் சூரிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளதுடன், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மீனவர்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தின் கதை, மீனவர்களுக்கு இடையே நடைபெறும் படகுப் போட்டியை மையமாகக் கொண்டுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. வெளியானது முதல் ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, உலகளவில் மேலும் 500க்கும் அதிகமான திரைகள் ‘மண்டாடி’ திரைப்படத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில், திரைப்படம் 20 நாட்களில் உலகளவில் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.

இதன் மூலம் சூரி கதாநாயகனாக நடித்த திரைப்படங்களில் அதிக வசூல் செய்த படமாக ‘மண்டாடி’ உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்களில் கணிக்கப்பட்டுள்ளது.


About Lanka Theepam