வரலாற்றில் முதற்தடவையாக தங்கப்பதக்கம் .... - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

வரலாற்றில் முதற்தடவையாக தங்கப்பதக்கம் ....


 



காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். 


நேற்று (30) பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று இவ்வரலாற்றுச் சாதனையைப் புரிந்துள்ளார். 

கடந்த காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கிடைத்தாலும் தங்கப் பதக்கம் கிடைப்பது இதுவே முதற்தடவையாகும். 

49 ஆவது தேசிய விளையாட்டு விழாவானது காலி மாவட்டத்தில் கடந்த 29 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று (31) நிறைவடையவுள்ளது. 

நேற்று இடம்பெற்ற குத்துச்சண்டைப் போட்டியில் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சசிகுமார் ஜெஸ்மிதா அவரது வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பயிற்றுவிப்பாளர் மற்றும் மாவட்ட பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

About Global Team