சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

சட்டவிரோதமாக நுழைய முயன்ற இலங்கையர்கள்

 


மலேசியா - தாய்லாந்து எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்றபோது, ​​இலங்கையர்கள் உட்பட 12 பேர் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகவரத்தால் திருப்பி அனுப்பப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


இந்தக் குழுவில் 8 இலங்கை ஆண்களும், ஒரு இலங்கைப் பெண்ணும் மூன்று தாய்லாந்து பெண்களும் அடங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாதது, தேவையான தங்கும் காலத்தை கடைபிடிக்காதது மற்றும் சர்ச்சைக்குரிய பயண நோக்கங்கள் காரணமாக அவர்கள் எல்லை வழியாக மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. 

நுழைவை மறுத்த நாட்டின் அதிகாரிகள், அவர்களை உடனடியாக தத்தமது நாடுகளுக்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளனர். 

இந்தக் குழு குற்றவாளிகளாக அடையாளம் காணப்படாததாலோ அல்லது அமுலாக்க விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாததாலோ கைது செய்யப்படவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

About Global Team