Dhoni: 'என் வழி.. தனி வழி' என்று கூற காரணம்....? - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

Dhoni: 'என் வழி.. தனி வழி' என்று கூற காரணம்....?

 

Dhoni: 'என் வழி.. தனி வழி' - மாஸாக பஞ்ச் டயலாக் பேசிய தோனி; வைரலாகும் வீடியோ!


ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் 'CSK' அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தோனி தமிழ் பட வசனங்களை பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவனும் ஆன 'சஞ்சு சாம்சன்' மற்றும் 'எம்.எஸ்.தோனி' நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

 அங்கு ஏதாவது தமிழ் பட வசனம் பேச சொல்லி கேட்டபோது சஞ்சு சாம்சன் “எனக்கு ரஜினிகாந்த் ரொம்ப பிடிக்கும்.... நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவெ சொன்னா மாதிரி” என்று பேசிக் காட்டி இருக்கிறார்.

 அதை தொடர்ந்து தோனியையும் ஏதாவது ஒரு வசனம் பேச சொன்னபோது அவர் படையப்பாவில் வரும் “என் வழி தனி வழி” என்ற டயலாக்கை பேசியிருக்கிறார். உடனே அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்திருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


About UPDATE