முன்னாள் சுகாதார செயலாளருக்கு விளக்கமறியல் - Global Tamil Voice புலனாய்வு செய்திகள்

முன்னாள் சுகாதார செயலாளருக்கு விளக்கமறியல்

 

தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா

உட்பட 7 சந்தேகநபர்கள் இன்று (17) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


 

மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா,

  டிசம்பர் 18 ஆம் திகதி இம்யூனோகுளோபுலின் முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வு வளாகத்திற்கு

வந்தபோது, குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

About UPDATE